செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களை குறைவான கட்டணத்தில் பேச முடியும்.
டிராய் வெளியிட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரோமிங்கில் இருக்கும்போது, லோக்கல் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் நிமிடத்திற்கு 1 ரூபாயிலிருந்து 0.80 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 1 ரூபாய் 15 காசுகளாகவும், இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 0.75 பைசாவிலிருந்து 0.45 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.ரோமிங்கில் உள்ளபோது லோக்கல் அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.00 ரூபாயிலிருந்து 0.25 பைசாவாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நீண்ட தூர அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 0.38 பைசாவாக அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment