தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 12 March 2015

மார்ச் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு


சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு  சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

+2 பாடத்திட்டம் மாறுமா?

   மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களும் அதனால் ஏற்படும் புரிதலும் முக்கிய பங்கு வகிப்பவை. இந்த பாடங்கள் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப உரிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. ஆனால் தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டம் பல வருடங்களாக மாற்றப்படாமல் உள்ளது.

   இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், "காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பத்திலும் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவுவது அவர்களின் பாடத்திட்டமே. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாட நூல்களை தயாரிக்கும் முறையையே கல்வித்துறை கையாண்டு வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளி வராமலே உள்ளது" என்றார்.

கல்வியாளர் ராஜகோபாலன் இது தொடர்பாக கூறுகையில், பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடத்திட்டம் இந்த வருடம் புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். பாடத்திட்டம் தயாரிக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டு வரைவு பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசிடம் இன்னும் கல்வித்துறை ஒப்புதல் பெறாததால் புத்தகஙள் அச்சிடப்படாமல் உள்ளன. அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பாடத்திட்டம் பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.

  இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபீதா கூறுகையில் பாடத்திட்டம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளிவராததால் பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வருடம் பாடத்திட்டம் மாற்றப்படாததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.              நன்றி:புதிய தலைமுறை

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியீடு




  உற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, கடந்த 1994-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதுபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, 1995-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்த மதிப்பில் நாணயங்கள்தான் அச்சிடப்பட்டன.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோவிலில் வைத்து, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி இந்த புதிய நோட்டை வெளியிட்டார்.
மற்ற ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், இந்த நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய நோட்டுடன், புழக்கத்தில் உள்ள பழைய ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லும்.

110 மைக்ரான் திண்மை கொண்ட இந்த நோட்டு, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் உள்ளது. நீர்க்குறியீட்டில், அசோகர் தூண் சின்னமும், வலதுபக்க ஓரத்தில் “பாரத்” என்ற வார்த்தை இந்தியில் மறைவாகவும் காணப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

         மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் யு.ஜி.சி.விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
       இதையடுத்து கல்யாணி மதிவாணன் நியமனத்துக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தசுப்ரீம் கோர்ட்டு, 2010–ம் ஆண்டு யு.ஜி.சி. கொண்டு வந்த விதிமுறைகள் சட்டம் ஆகவில்லை. எனவே, கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்தது. அவர் தொடர்ந்து துணை வேந்தராக நீடிக்கலாம் என்று தீர்ப்பு கூறியது.

முதலமைச்சரின் பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் , பட்டதாரிகள் சங்கம் முடிவு

       பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற தொடர் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறது.


இன்று மூன்றாவது நாளாக ஏழு பேரின் உண்ணாவிரதம் தொடர்கிறது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆண்களும் பெண்களும் மறியல் செய்து கைதாகினர். 

இதற்கிடையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் சங்கப் பிரதிநிதிகள் முதற் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைச்சர்  சங்கத்தின் ஒன்பது அம்ச கோரிக்கைகளை  கேட்டு அறிந்தார். 

இறுதியில் முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பிறகு முடிவுகளை அறிவிப்பதாகக் கூறினார். மேலும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால் முதலமைச்சரின் பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆணித்தரமாகக் கூறினர்.

பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..!


    நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்!

இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம் :-
எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!
இது தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடியது (வசை = திட்டுதல் )
இதில் முதல் வரியில் வரும் " எட்டேகால்" என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.
அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் " " அதே போல் கால் (Quarter) 1/4 - என்னும் பின்னத்துக்கு உரிய தமிழ் எண் " "
(1/4 cutting என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்துவிட்டு பின்னர் வரிவிலகிற்காக தமிழில் "" கட்டிங் என்று பெயர் வைத்ததை வேண்டுமானால் இங்கே புரிவதற்காக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! )
ஆக, எட்டேகால் = எட்டு + கால்
(எட்டு) 8 =
(கால் )1/4 =
எனவே இப்போது எட்டேகால் = அவ !!
இப்போது மேற்கண்ட பாடலின் முதல் வரியை படியுங்கள் .
'அவ' லட்சணமே என்று பொருள் வருகிறதல்லவா ?
இப்படி மிகவும் நுட்பமாக தன்னை இகழ்ந்தவனை வசை பாடுகிறார் அவ்வை!
அடுத்த வரிகளுக்கான பொருள் :-
----------------------------------------------------------
1. எமனேறும் பரியே - எருமைக்கடா
2. மட்டில் பெரியம்மை வாகனமே - மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
3. முட்டமேல் கூரையில்லா வீடே - மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே
4. குலராமன் தூதுவனே - ராமன் தூதுவனே அதாவது குரங்கே
5. கடைசி சொல்லான 'ஆரையடா சொன்னாயடா ' என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.
" நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! " என்பது ஒரு பொருள்.
இதில் இப்போது 'சொன்னாய்' என்பதை மட்டும் பிரித்தால்
'சொன்னாய்' = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும் அல்லது
யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும் !