பார்வையற்ற
கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி கால வரையற்ற தொடர் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டங்களை
நடத்தி வருகிறது.
இன்று மூன்றாவது நாளாக ஏழு பேரின் உண்ணாவிரதம் தொடர்கிறது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆண்களும் பெண்களும் மறியல் செய்து கைதாகினர்.
இதற்கிடையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் சங்கப் பிரதிநிதிகள் முதற் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமைச்சர் சங்கத்தின் ஒன்பது அம்ச கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
இறுதியில் முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்த பிறகு முடிவுகளை அறிவிப்பதாகக் கூறினார். மேலும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால் முதலமைச்சரின் பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத்தினர் ஆணித்தரமாகக் கூறினர்.

No comments:
Post a Comment