விஏஓ
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வின் போது
மூலச்சான்றிதழ்களில் குளறுபடி இருந்தால் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது,முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டன,இதில் வெற்றி பெற்றவர்களூக்கான கலந்தாய்வு வரும் 27 ந் தேதி துவங்க உள்ளது . இதற்காக சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை குறுந்தகவல்மின்அஞ்சல்
மூலம் தெரிவிக்கப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பிக்கும் போது அனுப்பப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படும் அதில் குளறுபடி இருந்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
சாதிச் சான்றிதழ் அச்சடிக்கப்பட்ட நிரந்தர அட்டையில் (பெண் விண்ணப்பதாரராக இருந்தால் அவரது தந்தைப் பெயரில் இருக்க வேண்டும்)
முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் தேர்வாணைய பணி வேட்பாளர்கான விதிமுறைகள் பத்தி 13(A)ல் குறிப்பிட்ட படிவத்தில் இருக்கவேண்டும். மாற்றுதிறனாளிகள் என்றால் அதற்காக உரிய மருத்துவக் குழுவினரிடம் இருந்து பெறப் பட்ட சான்றிதழ் மற்றும் உடல் ஊனத்தின் சரியான விழுக்காடு மற்றும் அவரது உடல் ஊனம் அவரது பணிகளைத் திறம்படச் செய்வதில் தடையாக இருக்காது என்று கருதுவதாகவும் மருத்துவக் குழுமத்தால் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தேர்வாணையத்திற்கு அனுப்பிய ஆதரவற்ற விதவை சான்றிதழில் உள்ள குறைபாடு சம்மந்தப்பட்ட அதிகாரிமூலம் திருத்தி அதற்கான மேலொப்பம் பெற்ற மூலச்சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும் தேர்வர்கள் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைபடியே சான்றிதழ் சரிபார்த்தல்,கலந்தாய்விற்கு அழைக்கப்படுகின்றனர்.வரத்தவறினால் தரவரிசைக் குரியபயன்களை அவர்கள் இழக்க நேரிடும்.
இவ்வாறு டி.என்.பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment