தமிழ் நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
மற்றும் உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு
செய்து அதற்கானப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.
காலிப்பணியிடங்களை
நிரப்ப கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலைப்
பட்டதாரிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வுக்குறிய சரியான விடைகளை
ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு கல்வி நிபுணர்களைக்கொண்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. விடைகளை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.
விடையில்
ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் மூலம்
தெரிவிக்கலாம். அல்லது சென்னை டி.பி.ஐ வளகத்தில் உள்ள ஆசிரியர்
தேர்வுவாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வருகிற ஜனவரி
29 ந்தேதிக்குள் போட்டுவிட வேண்டுமென்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment