தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 18 December 2014

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி; ஜி.எஸ்.எல்.வி., -எம். கே. 3 வெற்றி பயணம்


       பெங்களூரு : இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்ப திறன் வாய்ந்த ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் முன்னோடியாக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ராக்கெட் இது தான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எடை கொண்டதாக இந்த ராக்கெட் அமைந்துள்ளது. இதன் எடை 629 டன்; உயரம் 42.4 மீட்டர். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியின் முன்னோடியாக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 4 டன் எடையுள்ள விண்கலங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் சோதனை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மற்றொரு மைல்கல் என்றே கூறப்படுகிறது.

மாதிரி விண்கலம் வெற்றிகரமாக வங்க கடலில் விழுந்து சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த அரிய சாதனைக்கு பாடுபட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கொண்டார். விண்வெளி ஆராயச்சியில் இந்த சோதனை மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment