NASA
Space Settlement Contest 2015 என்று அழைக்கப்படும் வருடாந்திர போட்டி
குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாசா அமெஸ்(Ames) மற்றும் நேஷனல்
ஸ்பேஸ் சொசைட்டி(NSS) ஆகியவை இணைந்து, இந்தப் போட்டியை நடத்துகின்றன.
இப்போட்டியில்,
உலகெங்கிலுமிருந்தும், 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் விருப்பமுள்ள
மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில், தனியாகவோ, சிறு குழுவாகவோ(2
முதல் 5 பேர்) அல்லது பெரிய குழுவாகவோ(6 மற்றும் அதற்குமேல்) கலந்து
கொள்ளலாம். ஆனால், இவை ஒவ்வொன்றின் செயல்பாடும், தனித்தனியாக மதிப்பீடு
செய்யப்படும்.
அதேசமயம், வயது பாரபட்சமின்றி, செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே, சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டியவை
இப்போட்டியில்
கலந்துகொள்ளும் மாணவர்கள், வான்வெளி துறை தொடர்பான டிசைன்கள், ஒரிஜினல்
ஆராய்ச்சி, கட்டுரைகள், கதைகள், மாதிரிகள்(models), ஆர்ட்ஒர்க் அல்லது இதர
ஏதேனும் orbital space settlement தொடர்பான உபகரணங்களை சமர்ப்பிக்கலாம்.
நாசாவின்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில், entry படிவம் கிடைக்கிறது. உங்களது entry
-ன், hardcopy மற்றும் நிரப்பப்பட்ட entry படிவத்தின் இரண்டு hardcopy
-களை,
NASA Ames Research Center
Al Globus/Mail Stop 262-4
Bldg. 262, Rm. 277
Moffett Field, CA 94035-0001
USA
Al Globus/Mail Stop 262-4
Bldg. 262, Rm. 277
Moffett Field, CA 94035-0001
USA
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உங்களின் ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 1, 2015.
சிறந்த
ஆய்வுகளுக்கு, மேலான பரிசுகள் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளும்
வாய்ப்பும் வழங்கப்படும். Hardcopy மூலமாக மட்டுமே ஆய்வுகளை சமர்ப்பிக்க
வேண்டும். எலக்ட்ரானிக் முறையிலான சமர்ப்பித்தல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
No comments:
Post a Comment