டிசம்பர் 18,2014,16:19 IST
ம.தி.மு.க.,
மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு
நடத்தப்படுகிறது. பல இடங்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்
அமைக்கின்றனர்.
வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் தேர்வு மையங்களுக்கு
பிற பள்ளிகளிலிருந்து மாணவர்கள் 5 கி.மீ., தூரம் பயணம் செய்து தேர்வு
எழுதுகின்றனர். மாணவர்கள் சிரமம் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்.
அதிக தூரம் பயணம் செய்வதால் மனநிலை பாதித்து விரும்பத்தகாத சம்பவங்கள்
நடக்கின்றன.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்
அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனுஅனுப்பினேன். நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் வி.தனபாலன்,
வி.எம்.வேலுமணி பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் வக்கீல் பி.சுப்பாராஜ்
ஆஜரானார். நீதிபதிகள், ’இதை பொதுநல மனுவாக கருத முடியாது. தனி நீதிபதி
விசாரணைக்கு மாற்றப்படுகிறது,’ என்றார்.
No comments:
Post a Comment