நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில்
ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம்
கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத்
தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர்
தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்:
நம் நாட்டில்
தற்போது நடைமுறையில்உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,பலவேறுபாடுகள்,
ஏற்றத்தாழ்வுகள்உள்ளன. குழந்தைகளின்,சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்பகல்வியும்
மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நம்
நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்ஜனநாயக நாடு என கூறுவதற்கு,இப்போதுள்ள பள்ளி
கல்வி பாட திட்ட முறைநிச்சயம் உதவாது.சமூகம்,பொருளாதாரம், மதம்,கலாசாரம்
என, எந்தவகையிலும்,குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாதுஎன,அரசியல்
சட்டத்தின், 21வது பிரிவில்கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் கல்வி
உரிமைசட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாககல்வி வழங்க வேண்டும் என்பதை
மட்டுமின்றி,ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, நாடு
முழுவதும்,ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடியகல்வியை வழங்க வேண்டும்
என்பதையும்வலியுறுத்துகிறது.சமூக, பொருளாதார பாகுபாடுநீங்க வேண்டும்
என்றால், ஒரேவிதமானபாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்அமல்படுத்த
வேண்டும்.
பின்லாந்து,டென்மார்க்,
நியூசிலாந்து, நார்வே,கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,ஜெர்மனி, பிரிட்டன்,
ஜப்பான் போன்றநாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறைதான் அமலில்
உள்ளது.உத்தரவிட வேண்டும்:அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில்
ஒரேமாதிரியானபாடத்திட்டத்தைஅமல்படுத்தும்படி,
மத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுஅவர் மனுவில்
கூறியுள்ளார்.குளிர்காலவிடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட்
மீண்டும்இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.அப்போது, இந்த மனுவிசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment