தனித்தமிழ் வளர்ப்போம்


Saturday, 9 January 2016

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொற்கிழி!


விருதுநகர்: அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தலில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டி யிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,000 பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜன.,27, 28ல் போட்டிகல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கள் ஜன.,27ல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் ஜன., 28ல் , மாவட்டம் தோறும் கலெக்டரின் கூட்ட அரங்கில் நடக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், கூட்ட அரங்கில் வழங்கப்படும். நடுவர்களாக ஒன்பது தமிழாசிரியர்கள் இருப்பர். வெற்றி பெற்றவர் முடிவுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அறிவிப்பார்.விண்ணப்பிக்க அழைப்புஇதற்கான பரிசான பொற்கிழி, சான்றிதழ்களை அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார் பிறந்த நாட்களில் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார். 
போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment