தனித்தமிழ் வளர்ப்போம்


Wednesday, 6 January 2016

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு!


புதுச்சேரிதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வான குளூனி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்களை குறிஞ்சி நகரில் உள்ள புதுச்சேரி அறிவியல் இயக்கத்தில் நடந்த விழாவில் வழங்கினர்.
புதுவை அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறையின் மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து 23 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. 2015ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு தலைப்பாக தட்ப வெப்ப நிலையையும் கால நிலையையும் புரிந்துகொள்வோம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதிகளில் வழிகாட்டி ஆசிரியர் களுக்கு பயிற்சியளித்து, மாவட்ட மாநாடுகள் நடந்தன. இதில் 158 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 27 ஆய்வுத் திட்டங்கள் நவம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நடந்த மாநில மாநாட்டில் பங்கேற்றன. அவற்றில் சிறந்த 6 ஆய்வுகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் டிசம்பர் 27 முதல் 31 வரை சண்டிகரில் 23வது அகில இந்திய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. புதுச்சேரியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் சுதர்ஷன் தலைமையில் புதுச்சேரி, காரைக்கால், மாகியில் இருந்து 6 மாணவர்களும் இரு வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதிலிருந்தும் 700 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கபட்டன. இவற்றில் இருந்து சிறந்த 16 ஆய்வறிக்கைகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. 
அவற்றில் மாணவி ஓவியா தலைமையிலான ஆய்வு (வெவ்வேறு வெப்பநிலையில் கத்திரிசெடியின் வளர்ச்சி குறித்த ஆய்வு) அறிக்கை தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் துவாரகநாத் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment