சென்னை: சென்னை,
அண்ணா பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, ஜன., 20ல் நடக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவை, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, வெள்ள பாதிப்பால் விழா
தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 20ல் பட்டமளிப்பு
விழா நடத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலை வளாகத்தில், விவேகானந்தா கலையரங்கில் நடக்கும் விழாவில், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற, இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி சிறப்பு விருந்தினராக
பங்கேற்கிறார். பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகியவற்றில் முதல் தரம் மற்றும்
தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும், நேரடியாக பட்டம்
வழங்கப்படும். பிஎச்.டி., முடித்தவர்களுக்கும் நேரடியாக பட்டம்
வழங்கப்படும்.
No comments:
Post a Comment