அழிவின் விளிம்பில் இருக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க பொதுப்
பள்ளி முறையைக் கொண்டு வருவதே புதிய அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும், என, மாற்றுக்
கல்விக்கான மாநில மேடை அமைப்பினர், உடுமலை வேட்பாளர்களை நேரடியாக
சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வரவிருக்கும்
அரசு, என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும்,
இதுவரை ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் கூறிய
வாக்குறுதிகளை தெளிவாக கருத்தில்கொண்டும், தங்களுக்கான
தேவைகளை கோரிக்கைகளாக முன் வைத்து வருகின்றன பல்வேறு அமைப்புகள். உடுமலை
தொகுதியில், நீண்ட காலமாக ஏமாற்றம் நிறைந்த
எதிர்பார்ப்பாக இருப்பது மேம்படுத்தப்படாத கல்வி முறை.
இத்தேர்தலில்
போட்டியிடும் ஒவ்வொரு கட்சியிடமும், இங்குள்ள
கல்வியாளர்களும், பெற்றோரும், எதிர்பார்ப்பதும் இதுதான்.
கல்வி மாவட்டம்,
நுாலகத்துறையில் முன்னேற்றம் என்ற
வாக்குறுதிகளை ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் நினைவுப்படுத்தி வந்தாலும்
அதற்கான பதில் செயல்திட்டமாக அரசியல் கட்சிகளிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை.
இம்முறை இதற்கு தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற வேகத்தோடு, வேட்பாளர்களை சந்தித்து கல்வி மேம்பாட்டு திட்டங்களை கோரிக்கைகளாக
முன்வைத்து வருகின்றனர் உடுமலையைச் சேர்ந்த மாற்று கல்விக்கான மாநில மேடை
அமைப்பினர்.
அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி கூறியதாவது: கல்விக்கான திட்டங்களை தேர்தல்களின்போது
கட்சிகள் கூறினாலும் அவற்றை செயல்படுத்துவதில்லை. இம்முறை கல்வி
மேம்பாட்டு திட்டங்களை ஒரு கோரிக்கையாகவே வலியுறுத்தி, வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளோம். பள்ளிகளில் மாணவர்களுக்கு
குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்றுபாட வேளையாவது நுாலக பாடமாக இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில் நுாலகங்களை உயிரோட்டமாக செயல்படுத்த வேண்டும்.
மலைவாழ்
கிராமத்தில் உள்ள பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு
வந்து, அவற்றின் மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும். உடுமலை மற்றும்
மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள பள்ளிளை இணைத்து உடுமலையை மையமாகக்கொண்டு புதிய
கல்வி மாவட்டம் அமைக்க முழு முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு கல்வி
மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை ஒவ்வொரு வேட்பாளராக சந்தித்து முன்வைத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment