தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 12 May 2016

நல்ல வேலை தரும் நாட்டிக்கல் சயின்ஸ


           விமானங்கள் வரும் முன், கண்டம் விட்டு கண்டம் பயணம் செல்ல வேண்டுமென்றால் கடல் வழியாகத் தான் செல்ல முடியும். 
அன்று கப்பல்கள் மட்டுமே அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது. விமானங்கள் வந்த பிறகும் கப்பல்களின் முக்கியத்துவம் குறையவில்லை. பெருமளவில், கடல் மார்க்கமாகவே இன்று சரக்குகளின் ஏற்றுமதி, இறக்குமதி நடக்கிறது.
இத்துறையில் வேலைவாய்ப்புகளும் குவிந்துள்ளன. பணியாற்ற விரும்புவோர், நாட்டிக்கல் சயின்ஸ் படித்திருக்க வேண்டியது அவசியம். கடலில் பயணிப்பது, கப்பல்களை பராமரிப்பது, சரக்குகளை ஏற்றி, இறக்குவது, பயணிகள் மற்றும் பணிபுரிவோரின் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றி கற்றுத் தரப்படுகிறது. கடல் பயணங்களின் போது தேசிய, சர்வதேச வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அது பற்றியும் கற்றுத் தரப்படுகிறது. காம்பஸ்கள், ரேடார் உபகரணங்களை பயன்படுத்தவும், சர்வதேச கடல் வழிச் சட்டங்கள் குறித்தும், இதை சார்ந்த பொறியியல், சுற்றுச்சூழல் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.
யார் படிக்கலாம்
இப்படிப்பில் சேர, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் 60 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நாட்டிக்கல் சயின்சை பொறுத்தவரை, இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்று மதுரையில் அமைந்துள்ள ஆர். எல். இன்ஸ்டிட்யூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ். இது ஐ. எஸ். ஓ., தரச் சான்றிதழ் பெற்றது. அரசு அங்கீகாரம் பெற்ற கிரிசில் என்ற தரப் பரிசோதனை அமைப்பிடமிருந்து வெரி குட் சான்றிதழ் பெற்றது. 
இங்கு பி.எஸ்., மரைன் இன்ஜினியரிங், பி.எஸ்., நாட்டிக்கல் சயின்ஸ் கற்றுத் தரப்படுகிறது. படிப்பை முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இங்கு படித்தவர்கள் முன்னணியில் உள்ள 22 கப்பல் நிறுவனங்களில், பணிபுரிந்து வருகின்றனர். விபரங்களுக்கு: www.rlinstitutes.com இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment