தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday, 24 February 2015

"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்''

    அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.உலக தாய்மொழி நாளையொட்டி,
தமிழ்நாட்டு கல்வி இயக்கம், தமிழ் வழிக்கல்வி இயக்கம், தமிழர் தேசிய முன்னணி,திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற பிரசாரத்தில், தமிழை இறையாண்மை மிக்க மொழியாகவும், தமிழ் வழிக்கல்வி மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும்.மேலும், தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இதுமட்டுமன்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை திணிக்கக் கூடாது,அரசுப்பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment