தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday, 10 February 2015

பால் பவுடர் கலப்படத்தை எளிதாக கண்டறியும் முறையை கண்டுபிடித்த காந்திகிராம் பல்கலை


பால் பவுடரில் கலப்படத்தை ரூ.5 செலவில், நுகர்வோரே நானோ தொழில் நுட்பத்தில்எளிதாக கண்டறியும் முறையை, காந்திகிராம பல்கலை கண்டுபிடித்துள்ளது.

பால்பவுடரில் புரோட்டீனை அதிகரிக்க மெலமைன் என்ற பொருளை சிலர் கலக்குகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி, ஒவ்வாமை ஏற்படுகின்றன. சீனாவில், 2008ல் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை அடுத்து பால்பவுடரில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. தற்போது பவுடரில் கலப்படத்தை குரோமோட்டோ கிராபி கருவி மூலம் கண்டறியலாம்.ஒரு கருவி ரூ.15 லட்சம் என்பதால் சாதாரண மக்கள் கலப்படத்தை கண்டறிவது கஷ்டம். குறைந்த செலவில் கலப்படத்தை எளிதாக நுகர்வோர் கண்டறியும் முறையை, நானோ தொழில்நுட்பத்தில் காந்திகிராம பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் ஆபிரகாம்ஜான் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தங்க நானோ துகள் மற்றும் வெள்ளி நானோ துகள் திரவங்களை கண்டறிந்துள்ளனர்.பேராசிரியர் ஆபிரகாம்ஜான் கூறியதாவது: தங்க நானோ துகள் கருஞ்சிவப்பு நிறமாகவும், வெள்ளி நானோ துகள் மஞ்சளாகவும் இருக்கும்.

திரவத்தின் ஒரு சொட்டைகலப்பட பால்பவுடரில் விடும்போது நிறம் மாறும். பவுடரில் தங்கம் நானோ துகள் விடப்பட்ட இடம் நீலமாகவும், வெள்ளி நானோ துகள் நிறமற்றதாகவும் மாறிவிடும். மூன்று மி.லி., தங்க நானோ துகள் திரவத்தை ரூ.10க்கும், வெள்ளி நானோ துகள் திரவத்தை ரூ.5க்கும் பொதுமக்களுக்கு தரமுடியும். 3 மி.லி., திரவம் மூலம், குறைந்தது 5 முறை சோதனை செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment