தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday, 12 February 2015

ஆங்கில மொழித்திறன் தேர்வு: சென்னை மாணவர்கள் இருவர் சாதனை


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடு களில் வெளிநாட்டு மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமா னால் ‘டோஃபல்’ எனப்படும் ஆங்கில மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆங்கிலத் தில் பேசுதல், எழுதுதல், வாசித்தல், கவனித்தல் ஆகியவற்றை சோதிக் கும் விதமாக இந்த தேர்வுஅமைந் திருக்கும். எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் (இ.டி.எஸ்.) என்ற அமைப்புஇந்த தேர்வை நடத்துகிறது. இந்தியாவில் டோஃபல் தேர்வில் சாதனை படைக் கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.2014 டோஃபல் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட் டது. இதில் சென்னையைச் சேர்ந்த அனூப், பத்மபிரியா உட்பட 10பேர் அதில் இடம்பெற்றனர்.

ஆங்கில மொழித் திறன், பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண், தலைமைப் பண்பு, இதர துறைகளில் செய்த சாதனை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் சிறந்த மாணவர்களாக தேர்வுசெய்யப்பட்டனர். தலா 7 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 34 ஆயிரம்) வீதம் 70 ஆயிரம் டாலர் (ரூ.43.40லட்சம்) கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. அமெரிக்க துணை தூதர் பிலிப்-மின் இந்த உதவித்தொகையை வழங்கினார்.

No comments:

Post a Comment