Integrated courses எனப்படும் ஒருங்கிணைந்த படிப்புகளின் எண்ணிக்கையும்,
அப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், இந்தியாவில் அதிகரித்து
வருகிறது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: தற்போதுவரை, பல இந்தியப்
பல்கலைக்கழகங்கள், ஒருங்கிணைந்த படிப்புகளைத் தொடங்கியுள்ளன. அவை,
பொறியியல் துறையில், combo படிப்புகளை மட்டும் வழங்கவில்லை. மாறாக,
மெடிக்கல் நானோடெக்னாலஜி, கணிதம் மற்றும் டேட்டா-மேனேஜ்மென்ட் ஆகிய
துறைகளிலும் ஒருங்கிணைந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய
தொழில்துறை தேவைகளுக்கேற்ற வகையில், அப்படிப்புகள் இன்னும் சிறப்பான
வகையில் ஒருங்கிணைக்கப்பட்டால், எதிர்காலத்தில், மாணவர்கள், அதிகளவில்
அப்படிப்புகளின்பால் ஈர்க்கப்படுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, சாஸ்த்ரா
பல்கலை, வி.ஐ.டி. பல்கலை, அம்ரிதா பல்கலை, அண்ணா பல்கலை மற்றும் இதர
மாநிலப் பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட துறைகளில், ஒருங்கிணைந்த படிப்புகளை
ஏற்கனவே துவக்கியுள்ளன. பல கல்வி நிறுவனங்கள், சந்தை மற்றும் தொழில்துறை
தேவைகளை ஆய்வுசெய்து, அதற்கேற்ப, தங்களின் ஒருங்கிணைந்த படிப்புகளை
வடிவமைக்கின்றன. இரண்டு படிப்புகளின் பாடத்திட்டங்களை ஒருங்கிணைக்கும்போது,
முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்கள் எதுவும் விடுபட்டுவிடாதவாறு
கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைக்கும்போது, பாடங்களிலுள்ள
தேவையற்ற அம்சங்கள் நீக்கப்படுகின்றன மற்றும் தேவையான அம்சங்கள் கூடுதலாக
சேர்க்கப்படுகின்றன. மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது,
கணிப்பொறி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகள் இணைந்த
Integrated படிப்பிற்கு, அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஏனெனில், இந்த
ஒருங்கிணைப்பின் மூலமாக, தொழில்துறை தேவைகள் மற்றும் நிலை குறித்து தெளிவாக
அறிந்துகொள்ள முடிவதால், மாணவர்கள், இப்படிப்பை அதிகம் விரும்புகின்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment