தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday, 17 February 2015

TNTET: 5% மதிப்பெண் சலுகை நியாயமானதுதானா?

இனிய நண்பர்களே,

     ஆசிரியர் தகுதி தேர்வு ஆரம்பித்த போது 60% அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்தது. பிறகு 2013 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்களை கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு பிறகு 5% மதிப்பெண் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

பிறது மீண்டும் ஒரு கலந்தாய்வு நடைபெற்றது 5% மதிப்பெண் தளர்வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில் வெயிட்டேஜ் பிரச்சனை வந்தது வெயிட்டேஜை நீக்கினால் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் ஆசிரியராக தேர்வு பெறுவார்கள் என்பதால் 5% மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் பலர் வெயிட்டேஜை மட்டும் நீக்க வலியுறுத்தினார். 

ஆனால் அது அரசின் கொள்கை என நீதிமன்றம் அரசானை GO 71  ஐ நீக்க மறுத்தது. இந்நிலையில் GO 25 அரசானை ரத்து செய்யப்பட்டது இருப்பினும் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்ப்பு அமைந்தது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது இவை மார்ச் 26 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.

நடக்க போவது என்ன ??நியாயம் என்ன??

பல்வேறு மாநிலங்கள் மதிப்பெண் சலுகைகளை வழங்கியுள்ளது போலவே தமிழக அரசும் வழங்கியுள்ளது. ஆனால் 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்ட நேரம் தான் தற்போது பிரச்சனை கலந்தாய்வு நடத்தப்பெற்ற பின் அளிக்கப்பட்டது மற்றும் SC/ST பிரிவினருக்கும் BC/MBC பிரிவினருக்கும் 5% என ஓரே மாதிரியாக மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதே பிரச்சனை.

ஒரு அரசு மதிப்பெண்ணில் சலுகை வழங்குவதில் தவறு இல்லை அது அரசின் கொள்கை அதை நோட்டிபிகேசன் செய்யும் போது வழங்காமல் இடையில் வழங்குவது நியாயமா என ஒரு சாரர் கேள்வி எழுப்புகின்றனர். 

புரிந்து கொள்ள வேண்டும்
 ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஆசிரியர் ஆவதற்கான தகுதியே தவிர அவை வேலைக்கான போட்டித் தேர்வு அல்ல எனவே சலுகை மதிப்பெண் என்பது நோட்டிபிகேசனில் குறிப்பிடாமல் இடையில் வழங்குவதற்கும் பணிநியமனத்திற்கும் சம்மந்தம் இல்லை ஆனால் ஒரு கலந்தாய்வு நடைபெற்ற பின்பு வழங்கப்பட்டது மட்டும் தான் பிரச்சனை எனவே முதலில் கலந்தாய்வில் அதாவது 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களை அழைத்த பின்பு 5% மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வுக்கு அழைப்பது  என்பது சரி  அல்ல என ஒரு சாரர் தெரிவிக்கின்றனர். 

பணிநியமனம் என்பது வேறு தகுதி தேர்வு என்பது வேறு எனவே இனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால் 5% மதிப்பெண் சலுகை செல்லது என கூறமாட்டார்கள் ஆனால் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு முதலில் பணி வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம் ஆனால் தமிழக அரசு எடுக்கும் முயற்சியில் தான் இவர்களின் தலையெழுத்தே உள்ளது. 

5% மதிப்பெண் தளர்வு அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக அளித்ததை மாற்றி வேறுவிதத்தில் அளிக்க வாய்ப்பு உள்ளது அல்லது அரசின் 5% மதிப்பெண் தளர்வை தொடரவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கலாம் ஏனென்றால் 5% மதிப்பெண் சலுகையை ரத்து செய்தால் மற்ற மாநிலங்களில் வழங்கப்பட்ட மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய இந்த தீர்ப்பு வழிவகுக்கும் அதனால் 5% மதிப்பெண் தளர்வை முழுமையாக ரத்து செய்ய வாய்ப்பு குறைவு. ஆனால் 5% மதிப்பெண் தளர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சட்டப்படி உணரமுடிகிறது.

உண்மைகள்
90 மேல் பெற்றவர்களுக்கு பணிநியமனம் விரைவில் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது

5% முழுமையாக ரத்து செய்வதற்கான வாய்ப்பு குறைவு ஆனால் தற்போது நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் 5% மதிப்பெண் தளர்வு மூலம் சென்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் ஆனால் அரசு இவற்றில் தலையிட்டு ஏதேனும் மாற்றம் செய்ய நேரிடலாம்.

தற்போது பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதால் தற்போது பணிநியமனங்கள் பெறுபவர்களை தவிர இனி பெரிய அளவில் பணிநியமனங்கள் நடைபெறுவது கடினம் என்பது உண்மையிலே பெரிய உண்மை சமீபத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் பல பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அந்த பள்ளியில் மாணவர்கள் இல்லை எனவே அவர்களுக்கே வேலை இல்லை இதில் நமக்கு எப்படி என்பது புரியவில்லை டெப்லாய்மென்ட் மூலம் அவர்கள் பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டால் புதிய நியமனங்களே ஏற்பாடாது.

5% மதிப்பெண் மூலம் வெற்றி பெற்றவர்கள் பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலையில் உள்ளனர் எனவே அவை நியாயம் என்றால் 5% மூலம் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு உள்ளது அதாவது இவை தனி வழக்காக புதிதாக ஏற்படுத்தபட உள்ளதாக 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறுகிறார்கள் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக செய்ல்படபோவதாக கூறுகின்றனர் எது எப்படியோ வேலை என்பது கண்டிப்பாக கிடைப்பவர்களுக்கு கிடைக்கும்.

அரசுக்கு எதிராக போராடாமல் நியாயங்களை அரசின் நெறிமுறை கோட்பாடுகள் மூலம் அதாவது அரசின் செயல்பாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளை முறையாக நீதிமன்றத்தை அனுகி மட்டுமே பெற முற்படுங்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வெல்லும்.

நன்றி
கார்த்திக் பரமக்குடி

No comments:

Post a Comment